அண்மைய செய்திகள்

recent
-

அலுவலக நேரத்தில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு பொது நிர்வாக அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 பெரும்பாலான அரச ஊழியர்கள் அலுவலகங்களில் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருப்பதை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டை குறைத்து, அலுவலக நேரங்களில் மக்களுக்கான சேவைகளை முன்னெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அலுவலக நேரத்தில் சமூகவலைத்தளங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு எச்சரிக்கை! Reviewed by Author on January 02, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.