சட்ட விரோத கல் அகழ்வு ஊர் மக்களால் தடுத்து நிறுத்தம்
வவுனியா ஓமந்தை கோழியர் குளம் பிரதேசத்தில் உள்ள விவசாயத் திணைக்களத்துக்குரிய குளத்தின் அலகரையில் உள்ள கல்வெட்டையானது கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளரின் போலியான அனுமதி பத்திரத்துடன் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட தயாராகிய நிலையில் ஊர் மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.
குளத்தின் அலகரையில் பாரம்பரிய பிள்ளையார் கோவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
இன்றைய தினம் ஊர் மக்களால் விசேட பொங்கல் நிகழ்வும் இடம்பெற்றது.
ஊர் மக்களுடன் இணைந்து தமிழரசு கட்சியின் தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் பாலேந்திரன்,சிவபாலன், சிந்துஜன் மற்றும் சிறி ரெலோ செயலாளர் நாயகம் உதயராசா அவர்களும் கலந்து கொண்டிருந்தார்
Reviewed by Vijithan
on
May 29, 2025
Rating:






.jpg)








No comments:
Post a Comment