ரதெல்ல குறுக்கு வீதியில் எடை குறைவான வாகனங்கள் மாத்திரம் பயணிக்க அனுமதி
இன்று (08) முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குளிரூட்டப்பட்ட நகர்சேர் விரைவு பஸ்களும் எடை குறைவாக உள்ளமையினால் குறித்த வீதியில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ரதெல்ல குறுக்கு வீதியில் பஸ், முச்சக்கர வண்டி மற்றும் வேன் ஆகியன மோதி விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததுடன், 53 பேர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக குறித்த வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
ரதெல்ல குறுக்கு வீதியில் எடை குறைவான வாகனங்கள் மாத்திரம் பயணிக்க அனுமதி
Reviewed by Author
on
February 09, 2023
Rating:

No comments:
Post a Comment