அண்மைய செய்திகள்

recent
-

நீர்கொழும்பில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு, மாடுவையில் 30 வயதுடைய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய நபர், நேற்று மாடுவையில் ஆயுதங்களை மீட்க அழைத்துச் செல்லும்போது பொலிஸ் அதிகாரிகள் மீது கைக்குண்டை வீச முற்பட்ட போது சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அவர் கடந்த புதன்கிழமை வெலிகமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடையில் வசிப்பவர், துப்பாக்கிச் சூடு மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் தேடப்பட்டு வந்தவர், குற்றக் கும்பல் ஒருவரின் நெருங்கிய கூட்டாளியாகவும் செயற்பட்டுள்ளார். விசாரணையின் போது தெரிய வந்ததையடுத்து கட்டுநாயக்க சதுப்பு நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் துப்பாக்கியை மீட்க குறித்த நபர் அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 மீட்கப்பட்ட கைக்குண்டை வெடிக்கச் செய்ய முற்பட்ட போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனிநபரால் வீசப்பட்ட கைக்குண்டு வெடிக்கவில்லை, ஆனால் பின்னர் STF அதிகாரிகளால் செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றம் நடந்த இடத்தில் இருந்து தானியங்கி கைத்துப்பாக்கி, மகசீன் மற்றும் இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்

.
நீர்கொழும்பில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு Reviewed by Author on February 24, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.