மன்னார் மாவட்ட அரச,தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
அரசாங்கத்தினால் முன்னவைக்கப்பட்டுள்ள வரியானது 6 வீதம் தொடக்கம் 36 வீதமாக உள்ள நிலையில் அதை 6 வீதம் தொடக்கம் 24 வீதமாக குறைக்க கோரியும் வரி அறவிடும் சம்பள எல்லையை ஒரு லட்சம் தொடக்கம் இரண்டு லட்சம் வரை மட்டுப்படுத்தி வரி அறவிடுமாறு கோரியும் வங்கி ஊழியர்கள் போரட்டத்தை மேற்கொண்டனர்
வானுயரும் பணவீக்கம் தொழில் வல்லுனர்கள் நடு வீதியில், நண்பர்களுக்கு வரி சலுகை தொழில் வல்லுநர்களுக்கு வரிசுமை,நியாயமான வரி வேண்டும்,நியாயமற்ற வரி சுமை வேண்டாம் போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாரு வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
போராட்டத்தின் நிறைவில் மன்னார் பிரதான சுற்றுவட்ட பாதையை நோக்கி வரி சுமைக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றமை குறிப்பிடத்தக்கது
மன்னார் மாவட்ட அரச,தனியார் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
Reviewed by Author
on
February 08, 2023
Rating:

No comments:
Post a Comment