மன்னாரில் சரிந்து விழுந்த காற்றாலை மின் கோபுரம்
அப்பகுதியில் கால்நடைகள் விவசாயிகள் மாத்திரம் சென்று வரும் பகுதி என்பதால் சம்பவம் வெளியில் தெரியாமல் இருந்துள்ளது.
எனினும் அப்பகுதியில் செய்கை பண்ணப்பட்டிருக்கும் விவசாய நடவடிக்கைகளை பார்வையிடச் சென்ற போது கோபுரம் சரிந்து கிடப்பதையும் கனரக பளு தூக்கும் கிரேன் வாகனம் சேதமாகி இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
குறித்த கோபுரம் சரிந்து கிரேன் மீது விழுந்த போதும் கிரைன் இயக்குனர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த சம்பவம் நடை பெற்றதில் இருந்து அப்பகுதியில் காற்றாலை கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது டன் இம் மாத இறுதியில் மீண்டும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகிறது.
நானாட்டான் பிரதேசத்தில் நறுவிலிக்குளம் முதல் அச்சங்குளம் வரை 6 மின் கோபுரங்களுக்கான பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சரிந்து விழுந்த காற்றாலை மின் கோபுரம்
Reviewed by Author
on
February 01, 2023
Rating:
Reviewed by Author
on
February 01, 2023
Rating:









No comments:
Post a Comment