அமரகீர்த்தி அத்துகோரள கொலை சந்தேகநபர் உயிரிழப்பு
பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவை கடந்த மே மாதம் 9ஆம் திகதி தாக்கிக் கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். சந்தேகநபரான முன்னாள் இராணுவ சிப்பாய் மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நிட்டம்புவ எல்லக்கல பிரதேசத்தை சேர்ந்த ஹெந்தவிதாரண நிபுண புத்திக என்ற 26 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
.
இரகசிய பொலிஸ் அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு மஹர விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புற்று நோயினால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், மஹர சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அமரகீர்த்தி அத்துகோரள கொலை சந்தேகநபர் உயிரிழப்பு
Reviewed by Author
on
February 08, 2023
Rating:

No comments:
Post a Comment