மன்னாரில் இடம் பெற்ற விசேட தகவல் தொழில்நுட்ப கலந்துரையாடல்
மன்னார் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் தகவல் தொழில் நுட்பரீதியாக காணப்படும் புதிய அனுகுமுறைகளை மற்றும் தொழில் வாய்புக்களை தெளிவுபடுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் இலங்கை தகவல் தொழில்நுட்பத்துறை கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இன்று வியாழக்கிழமை(23) காலை 10 மணியளவில் இடம் பெற்றது
மன்னார் மாவட்டத்தில் உள்ள தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு நவீன தொழில்நுட்ப அனுகுமுறைகள் தொடர்பாகவும் தொழில்நுட்ப ரீதியாக தேசிய அளவில் காணப்படும் தொழில் வாய்புக்கள் மற்றும் உயர்கல்வி கற்கைக்கான வாய்ப்புக்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் முகமாக குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டு இடம் பெற்றது
குறித்த கலந்துரையாடலுக்கு விரிவுரையாளர்களாக இலங்கை தகவல் தொழில் நுட்ப கூட்டமைப்பின் செயளாலர் கிறிஸ்றி சாமுவேல் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்பதுறை கூட்டமைப்பின் உறுப்பினர் முகமட் இர்சாட் மன்னார் உயர் தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவபாலன் உட்பட குழுவினர் கலந்து கொண்டு விரிவுரைகளை வழங்கியிருந்தனர்
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலக மனிதவள உத்தியோகஸ்தர்கள்,தேசிய தொழிற்பயிற்சி பயிலுனர் அதிகாரசபை ஊடாக கல்வி பயிலும் மாணவர்கள்,தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் தொழில்நுட்ப கற்கைகள் பயிலும் மாணவர்கள் கணனி துறை சார்ந்து செயற்படும் நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்
குறித்த தொழில்நுட்ப தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் மன்னார் மாவட்டத்தை தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் இலங்கை தகவல் தொழில்நுட்பதுறை கூட்டமைப்பினால் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மன்னாரில் இடம் பெற்ற விசேட தகவல் தொழில்நுட்ப கலந்துரையாடல்
Reviewed by NEWMANNAR
on
March 23, 2023
Rating:
No comments:
Post a Comment