அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா குடும்பத்தின் மரணம்; உண்மையைப் பகிரப்படுத்த கோரிக்கை!

வவுனியாவில் நால்வர் அடங்கிய குடும்பத்தின் மர்ம மரணம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையைப் பகிரங்கப்படுத்துமாறு நாடாளுமன்றில் கோரிக்கை முன்வைக்கபப்ட்டுள்ளது. இந்த கோரிக்கையினை பொலிஸ்மா அதிபரிடம் முன்வைப்பதாக ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

 உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், வவுனியாவில் தந்தை, தாய் மற்றும் இரு பிள்ளைகள் உட்பட நால்வர் அடங்கிய குடும்பத்தினர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் மரணம் தொடர்பில் மாறுபட்ட பல கருத்துக்கள் வருகின்ற போதும் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையும் இன்னும் முழுமையாக வரவில்லை. எனவே , இந்த மரணம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து உண்மையைப் பகிரங்கப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் செல்வம் அடைக்கலநாதன் கூறினார். வவுனியா - குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42), , அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9) , கௌ.கேசரா (வயது3) ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது



.
வவுனியா குடும்பத்தின் மரணம்; உண்மையைப் பகிரப்படுத்த கோரிக்கை! Reviewed by Author on March 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.