அண்மைய செய்திகள்

recent
-

விபத்தில் குடுப்பஸ்தர் பலி

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியின் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது பாடசாலை வீதி விநாயகபுரத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கோ.முருகன் வயது (52) என்ற குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார். உறவினர் ஒருவரின் மரண வீட்டில் கலந்து கொண்டவர்களுக்காக மதிய உணவினை சாப்பாட்டுக் கடையில் கொள்வனவு செய்யும் முகமாக மோட்டார் சைக்கிளில் சென்றவேளை பின்னால் வந்த வட்டா என அழைக்கப்படும் வாகனமொன்று மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

 காயமடைந்தவரை அருகில் உள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை வழங்கிய போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தொவித்தனர். வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதி மன்ற பதில் நீதிபதி எம்.தயாபரன் விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர் சடலம் உடற் கூற்ராய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான கட்டளையினை பொலிசாருக்கு பணித்தார். விபத்திற்குள்ளான பட்டா வாகனம், மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் குடுப்பஸ்தர் பலி Reviewed by Author on March 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.