60 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன்: 24 மணி நேரத்திற்குப் பிறகு பிணமாக மீட்பு
60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 43-வது அடியில் சிறுவன் லோகோஷ் சிக்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனை மீட்பதற்கான தொடர் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர்.
சுவாசிக்க காற்றில் இல்லாமல் தவித்த சிறுவனுக்காக ஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டி 24 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சி றுவன் 14 கி.மீ தொலைவில் உள்ள லேட்ரி நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், ஏற்கெனவே சிறுவன் லோகோஷ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அக்கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
60 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 7 வயது சிறுவன்: 24 மணி நேரத்திற்குப் பிறகு பிணமாக மீட்பு
Reviewed by Author
on
March 15, 2023
Rating:

No comments:
Post a Comment