QR கோட்டா புதுப்பிக்கப்படும் தினத்தை மாற்றியதால் 300 இலட்சம் ரூபா செலவு குறைந்துள்ளது: கஞ்சன விஜேசேகர
கொலன்னாவை, முத்துராஜவெல மற்றும் 11 இடங்களில் உள்ள டிப்போக்களில் 195 இலட்சம் ரூபாவிற்கு காணப்பட்ட நேரடி செலவும் மின்சாரம், நீர், தொடர்பாடல், சுத்தப்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கான 100 இலட்சம் ரூபா மறைமுக செலவும் மீதப்பட்டுள்ளதாக அமைச்சர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான QR கோட்டா முறைமைமைக்கு அமைவாக, எரிபொருள் விநியோகத்தை வாராந்தம் புதுப்பிக்கும் நாள் இதற்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவாக இருந்தது.
எனினும், புதுப்பித்தல் நடவடிக்கை தற்போது ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
QR கோட்டா புதுப்பிக்கப்படும் தினத்தை மாற்றியதால் 300 இலட்சம் ரூபா செலவு குறைந்துள்ளது: கஞ்சன விஜேசேகர
Reviewed by Author
on
March 10, 2023
Rating:
Reviewed by Author
on
March 10, 2023
Rating:


No comments:
Post a Comment