தரிந்து உடுவரகெதரவிற்கு பிணை
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தரிந்து உடுவரகெதர இன்று (29) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் மற்றும் கூட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தினால் நேற்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நேற்று இரவு பொரளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று அவரிடம் வந்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் தரிந்து உடுவரகெதர நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment