கோட்டாவின் இல்லத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்டவர்களின் மனுக்கள் விசாரணையின்றி தள்ளுபடி
கடந்த வருடம் மிரிஹானவிலுள்ள அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மூவரின் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
ப்ரீதி பத்மன் சூரசேன மற்றும் மகிந்த சமயவர்தன ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் தம்மை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து அவர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி முன்வைத்த சமர்பணங்களை பரிசீலித்த உயர் நீதிமன்றம், மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

No comments:
Post a Comment