அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு-இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது.

 மன்னார் அடம்பன் மினுக்கன்  முள்ளிக்கண்டல் பகுதியில்   வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்  உயிரிழந்த இரண்டு குடும்பஸ்தர்களின் சடலங்கள் உறவினர்களிடம் நேற்று கையளிக்கப்பட்டிருந்த  நிலையில் இறுதிக்கிரிகைகள் இன்றைய தினம் சனிக்கிழமை (26) இடம் பெற்றுள்ளது.


துப்பாக்கிச் சூட்டில் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது-42) 3 பிள்ளைகளின் தந்தை  மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஈச்சளவக்கை கிராமத்தை சேர்ந்த கருணா எனும் கணபதி காளிமுத்து (வயது-56) 6 பிள்ளைகளின் தந்தை ஆகிய இரு குடும்பஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும்  வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிலில் வயலில் இருந்து தண்ணீர் திக்க சென்ற போது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதோடு, குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர்.


இதேவேளை கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சி குளத்தைச் சேர்ந்த   ஜேசுதாசன் அருந்தவராஜா என்ற குடும்பஸ்தரும்  குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

மேலும்  ஜேசுதாசன் அருந்தவராஜாவின் வயலிற்கு பக்கத்து வயல் செய்யும் ரமணன் என்பவரது வயலில் வேலை செய்யச் சென்ற ஈச்சளவக்கை கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து என்பவர் வயலுக்கு  தண்ணீர் திறப்பதற்கு  இவர் வேலைசெய்யும்  வயலின் பக்கத்து வயல் உரிமையாளரான ஜேசுதாசன் அருந்தவராஜா{வெஞ்சலோ}  என்பரது மோர்ட்டார் சைக்கிலில் ஏறி சென்ற போது சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார் காளிமுத்து  இவர் தினக்கூலி செய்து வாழ்க்கை நடாத்தி வந்த மிகவும் வறுமையான குடும்பம்  என்பதோடு இவரது வறுமை நிலையை கருத்தில் கொண்டு காளிமுத்து வேலை செய்து வந்த  வயல் உரிமையாளர் காளிமுத்தின் மரண செலவை செய்து வருகிறார் என்பதும் இங்கு கறிப்பிடத்தக்கது.

  கடந்த வருடம் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற இரு சகோதரர்களின் இரட்டை கொலைக்கு பழிக்கு பழி வாங்கும்  நோக்குடன் இச்சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதோடு கடந்த மாதமும்  அருந்தவராஜாவின் மாமனும் வாகன விபத்தில் உயிரிழந்திருந்தார் அதுவும் விபத்தா  என சந்தேகம் எழுந்துள்ளதாக அறியமுடிகிறது

-குறித்த இரட்டை கொலை தொடர்பாக அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 






மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு-இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது. Reviewed by Author on August 26, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.