புலத்திலும் தாயக நிலத்திலும் தியாக செம்மல் திலீபனின் 36 ஆம் ஆண்டு அனுஸ்டிப்பு
தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 ம் ஆண்டு இறுதி நாள் நிகழ்வுகள் நேற்றயதினம் வடக்கு கிழக்கு தாயக தமிழர் பிரதேசங்களில் மிகவும் உணர்வெழிச்சியோடு நடைபெற்றுள்ளது 1987 ம் ஆண்டு இந்திய அமைதிப்படை என்ற போர்வையோடு தமிழர் தாயகப்பகுதியில் வந்து இலங்கை அரசோடும் ஒட்டுக்குழுக்களோடும் சேர்ந்தியங்கி எமது மக்களை ஆக்கிரமித்து படு கொலை செய்தும் வண்புணர்வுகள் செய்தும் தமிழ் மக்களை வதைபடுத்தி வந்தததை கண்டு மக்களுக்காக மண்ணை மீட்க வந்த யாழ் ஊரெழு யாழ்பல்கலைகழக மருத்துவ பீடத்திற்கு மாணவனும் இராசையா பார்த்தீபன் தமிழீழ போராட்டத்தில் இணைந்தவன் யாழ்மாவட்ட அரசியல்துறை பொருப்பானாக கிட்டண்ணாவோடு அவர்காலப்பகுதியில் செயற்ப்பட்டவர் திலீபன் அவர்கள் இந்திய இராணுவத்தை வெளியேறவும் கூறி ஐந்து அம்ச கோரிக்கையினை முன் வைத்து யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் 15/09தொடக்கம் 26/09வரை பன்னிரண்டு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இதே நாள் 1987 "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் " என தாரக மந்திரமாக கூறி அன்று வீரமரணம் அடைந்தார் திலீபன் அவர்களுடைய நினை நாளினை தமிழர்கள் தாகப்பிரதேசத்திலும் புலம்பெயர் தமிழர்கள் நினைவுகூறி வருகின்றனர் இந்த வருடமும் நினைவு கூற இலங்கை அரச படைகள் நீதி மன்றங்களில் தடை உத்தரவு பெற்று அடாவடிகள் நினைவு கூறுபவர்கள் தாக்கப்பட்டும் நினைவிடத்தில் அஞ்சலி செய்யும் மக்களை செய்தி சேகரிக்க செல்லும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ பதிவுகளுக்கு மத்தில் பன்னிரண்டு நாள் கடந்தும் மக்கள் நினைவு நிகழ்வு ஏற்ப்பாட்குழு வெகு சிறப்பாக உணர்வு பூர்வமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment