அண்மைய செய்திகள்

recent
-

தேராவில் பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்.

 தேராவில் பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்.


தியாகதீபம் திலீபன் அண்ணாவின் 36 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயக அரசியல் துறையினரின் ஒழுங்கமைப்பில் 24.09.2023 இன்றைய தினம் மாலை 4:30 மணியளவில் மூங்கிலாறு பிரதேசத்தில் தேராவில் புதியநிலா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் இடம்பெற்றது 

முன்னைநாள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரை மூன்று மாவீரர்களின் தாயார் ஜோசேப் முணியம்மா ஏற்றிவைக்க  மலர்வணக்கத்தை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆரம்பித்து வைக்க தொடர்ந்து மாவீரர்களின் சகோதரர்கள் தாயக அரசியல்துறை செயற்பாட்டாளர்கள்  சமூக செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் மாணவர்கள் இறுதிப்போட்டிக்கு தெரிவான அணி வீரர்கள் என பலரும் மலர்வணக்கம் செலுத்தினர். 

தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 36ம் ஆண்டு நினைவுகளைச் சுமந்த மாபெரும் மென்பந்து துடுப்பாட்டப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டிக்கான அணிகளை சந்தித்து மைதானத்தில் நாணயச்சுழற்சி நடைபெற்று போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது 



















தேராவில் பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அண்ணாவின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள். Reviewed by Author on September 24, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.