அண்மைய செய்திகள்

recent
-

உயிர்த்த ஞாயிறு அறிக்கை வெளிப்படுத்திய இரகசிய உண்மைகள் மறைப்பு?

 தற்போது நாட்டுக்கு தேவை ஆரவார சத்தங்களோ மக்கள் கரகோசங்களோ அல்லவெனவும்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பிரதான சூத்திரதாரிகளாக செயல்பட்டவர்கள், அதில் பொதிந்துள்ள அரசியல் இலக்குகள், அதை அரசியலுக்குப் பயன்படுத்திய கட்சிகள் போன்றவற்றைப் பற்றிய உண்மைதான் நாட்டுக்கு இப்போது தேவை என்றும், இதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அடுத்த வாரம் 2 நாள் விவாதத்திற்கான பிரேரணையை முன்வைத்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கத்திடம் கேட்டபோது, ​ஜனாதிபதி கோட்டாபய ராஜ்பக்ச பின்பற்றியது போலவே இரகசியங்கள் மறைந்திருக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களை எதிர்க்கட்சித் தலைவருக்குக் கூட கிடைக்காத வகையில் தற்போதைய ஜனாதிபதியும் மறைத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


பிரபஞ்சம் பாடசாலை பஸ் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 77 ஆவது கட்டமாக களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு 50 இலட்சம் ரூபா பெறுமதியான பஸ் வழங்கும் நிகழ்வில் இன்று (14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இரகசியமான மற்றும் உணர்ச்சிகரமான விடயங்கள் என்று கூறி தற்போதைய ஜனாதிபதியும் உண்மையை மறைத்து வருகின்றார் என்றும், மக்களுக்கும் போலவே எதிர்க்கட்சித் தலைவரால் கூட வாசிக்க முடியாத வகையில் மறைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு மறைப்பதால் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி செயற்பட்டதைப் போன்றே தற்போதைய ஜனாதிபதியும் உண்மையை மறைத்து செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இதன் காரணமாக தனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும், இந்த உண்மையை தெரிந்து கொள்வது தனிநபர்களுக்கு சேறு பூசுவதற்கல்லவெனவும், உண்மைகளை மக்களுக்கு வெளிப்படுத்தவே என்றும், சேறு பூசும் அரசியல் கலாச்சாரத்தை தாம் ஒரு போதும் கடைப்பிடிப்பதில்லை என்றும், இவ்வாறே உண்மை தொடர்ந்தும் மறைக்கப்பட்டால் மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையே ஒற்றுமையின்மை உருவாகலாம் என்பதனால்,இதனை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், உண்மையை மறைக்கும் அரசாங்கமே தற்போது நாட்டில் செயற்பட்டு வருவதனால் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பதவி தராதரங்கள் இன்றி சேறுபூசும் அநாகரிக அரசியலை நடைமுறைப்படுத்தாது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு காரணமான அனைத்து விடயங்களும் மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நாட்களில் பலர் வெறுக்கத்தக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மனதில் கொண்டுள்ளனர் என்றும், இது தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன என்றும், இந்த விடயத்தில் ஒரு நாடு என்ற வகையில் நாம் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்றும், இதனால் வெளிப்படையான மற்றும் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை தேவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வழங்கிய முக்கியமான வாக்குறுதியானது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் வெளிப்படுத்தி அவர்களை நீதியின் முன் நிறுத்துவதாகும் என்றும், இதனால் அவருக்கு மகத்தான மக்கள் ஆணை கிடைத்தபோதிலும், அவர் ஆட்சிக்கு வந்த நாள் முதல், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக அதை மூடிமறைக்கவே ஒவ்வொரு நொடியும் செயற்பட்டார் என்றும், இதன் மூலம் நாட்டில் இன பேதம், முரண்பாட்டை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டார் என்றும், கோவிட் காலத்தில் தகனமா அல்லது அடக்கமா தொடர்பான பிரச்சினையின் போது கூட, அவர் நாட்டின் இனங்களைப் பிளவுபடுத்துவதற்காகவே பணியாற்றினார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நம் நாட்டு அரசியலில் 3 தரப்புகள் உள்ளன என்றும்,அதில் ஒன்று பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்து நாட்டின் பணத்தையும் மக்களின் பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு இலஞ்சம், ஊழல், மோசடி, திருட்டு போன்றவற்றைச் செயல்படுத்தி குடிமக்களை போஷிப்பதை விடுத்து தாம் கோடீஸ்வரர்களாகி குடும்ப அரசியலுக்குள் தங்களுக்கு நாட்டை சுதந்திரமாக எழுத முயல்கின்ற தரப்பினர் என்றும், இரண்டாம் தரப்பு எந்த பிரச்சனைக்கும் அவர்களிடம் தீர்வில்லாத தரப்பு என்றும், சர்ச்சைகளையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தி சமூகத்தை பிளவுபடுத்தி இதனூடாக அரச அதிகாரத்தை பெற முயற்சிக்கும் தரப்பினர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த இரண்டு தரப்பினரையும் தவிர்த்து, 3 ஆவது தரப்பாக ஐக்கிய மக்கள் சக்தியானது தேசியத் தேவைகளின் அடிப்படையில், தேச நலனை முன்னிலையாகக் கொண்டு, தேசிய நிகழ்ச்சி நிரலை தயாரித்து அரச அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆற்றல் மற்றும் திறமையின் அடிப்படையில் நாட்டுக்காக பணியாற்றும் தரப்பாக செயலாற்றி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் எந்த எதிர்க்கட்சியும் செய்யாத சேவையை கடந்த 3 ஆண்டுகளில் ஐக்கிய மக்கள் சக்தி செய்துள்ளதுள்ளதாகவும், இதன் கீழ் 56 அரச வைத்தியசாலைகளுக்கு 1719 இலட்சம் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், 77 பாடசாலைகளுக்கு 374 மில்லியன் ரூபா பெறுமதியான பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்பத் திட்டத்தின் கீழ் 33 பாடசாலைகளுக்கு 290 இலட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சேவையை ஆற்றிய எதிர்க்கட்சி வேறெதுவும் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அதேபோல் குறைபாடுகள், பிரச்சினைகள் எங்கு இருக்கிறதோ அங்கு விமர்சன அரசியலுக்கு மாத்திரம் மட்டுப்படாமல் அந்த பிரச்சினைகளுக்கு ஓரளவேனும் தீர்வுகளை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி செயற்படுவதாகவும், ஏனைய கட்சிகளைப் போல, பெற்ற உபகாரங்களை தீவுகளிலும், நட்பு வட்டார முதலாலித்துவ நிறுவனங்களிலும் முதலீடு செய்யவில்லை என்றும், சமூகப் பொறுப்பு, சமூகக் கடமை, தேசியப் பொறுப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி மக்களின் நலனுக்காகவே இதுவரை கிடைக்கப்பெற்ற பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

திருட்டு, மோசடி, ஊழல் இல்லாமல் இந்த வேலையைச் சரியாகச் செய்தால், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும், செல்வந்தர்களும் உதவுவார்கள் என்றும், எதிர்க்கட்சியால் செயல்படுத்தப்படும் பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களுக்கு மேற்குறித்தவர்களே பணம் வழங்குவதாகவும், இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் சிறந்த வெளிப்படத்தன்மையுடன் நடத்தப்படுவதால், அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியை நம்புகிறார்கள் என்றும், இந்த முறையின் கீழ் எதிர்காலத்தில் டொலர் பிரச்சினைக்கு கூட தீர்வு காண முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டினார்.


உயிர்த்த ஞாயிறு அறிக்கை வெளிப்படுத்திய இரகசிய உண்மைகள் மறைப்பு? Reviewed by Author on September 14, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.