வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்
வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூளியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (11.01.2024) காலை 10.00 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 30 நிமிடங்கள் அமைதியான முறையில் இவ் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
வைத்தியசாலை சிற்றூளியர்கள் சுகயின விடுமுறை வழங்கி கடமையிலிருந்து விலகி குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்
Reviewed by வன்னி
on
January 11, 2024
Rating:
Reviewed by வன்னி
on
January 11, 2024
Rating:






No comments:
Post a Comment