சிறப்பாக இடம் பெற்ற மன்னார் -அல்-ஹிக்கம் பாலர் பாடசாலையின் 7 ஆம் வருட பூர்த்தியும்,பரிசளிப்பு நிகழ்வும்.
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் -அல்-ஹிக்கம் பாலர் பாடசாலையின் 7 ஆம் வருட பூர்த்தியும்,பரிசளிப்பு நிகழ்வும்.
மன்னார் மூர் வீதியில் அமைந்துள்ள அல்-ஹிக்கம் பாலர் பாடசாலையின் 7 ஆம் வருட பூர்த்தியும்,மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் புதன்கிழமை மாலை பாடசாலையில் இடம் பெற்றது.
பாடசாலையின் முகாமைத்துவ குழு,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிமனையின் ஆரம்ப பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் வி.ஆர்.அஸ்லம் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினராக மன்னார் வலய கல்வி அலுவலக அதிகாரி ஏ.எல்.எம்.மதீன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது குறித்த பாலர் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,மாணவர்களுக்கு பரிசில்கள்,சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment