சம்மாந்துறை, மல்வத்தை பிரதேச மக்களின் வெள்ள நிலை தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்த ஹரீஸ் எம்.பி
சம்மாந்துறை, மல்வத்தை பிரதேச மக்களின் வெள்ள நிலை தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்த ஹரீஸ் எம்.பி
அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை தொடர்பில் கள விஜயம் செய்து ஆராய்ந்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் இன்று சம்மாந்துறை பிரதேசத்திற்கு விஜயம் செய்து மல்வத்தை விபுலானந்தா மகா வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது பாதிப்பு நிலைகளை மக்களிடம் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் ஏற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகளிடம் ஆராய்ந்ததுடன் நீர்நிலைகளின் நிலை, வெள்ள நீர் வழிந்தோடும் பாதை போன்றவற்றையும் அடுத்த கட்ட ஆயத்த நிலைகளையும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா அவர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் துரிதகதியில் நிவாரண பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும், சமைத்த உணவு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடி பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு செய்ய தேவையான நடவடிக்கை எடுத்தார்.
இந்த விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகர்கள், சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment