அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

 வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (29.01) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை விற்று வருவதாக மடுக்கந்தை பகுதியில் நிலை கொண்டுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து, குறித்த பெண் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரப் பகுதி நோக்கி ஐஸ் போதைப் பொருளுடன் மோட்டர் சைக்கிளில் வந்த நிலையில் வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் குறித்த பெண்ணை வழிமறித்து சோதனை செய்த போது ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன், குறித்த பெண்ணை கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்தனர். குறித்த பெண்ணிடம் இருந்து 920 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட பெண் வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.



வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது Reviewed by வன்னி on January 30, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.