யாழ் நல்லூரில் தாலிக்கொடி அறுத்த கொழும்பு பெண்ணுக்கு நேர்ந்த கதி
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
தேர் திருவிழாவில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவரின் தாலிக்கொடி அறுக்கப்பட்டமை தொடர்பில் , ஆலய சூழலில் கடமையில் இருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
துரிதமாக செயற்பட்ட பொலிஸார் , ஆலய சூழலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் உதவியுடன் தாலிக்கொடி அறுத்த பெண்ணை அடையாளம் கண்டு கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ,பெண்ணிடம் இருந்து அறுக்கப்பட்ட தாலிக்கொடி மீட்கப்பட்டது.
Reviewed by Vijithan
on
September 12, 2026
Rating:


No comments:
Post a Comment