வரவேற்பறை முகாமைத்துவம் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!
வரவேற்பறை முகாமைத்துவம் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மற்றும் முகாமைத்துவ நிர்வாகம். சுற்றுலா அமைச்சினால் நடாத்தப்பட்ட வரவேற்பறை முகாமைத்துவம் பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் தலைமையில் இன்று(11) காலை 9.45 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு க.கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், உதவி தேர்தல் ஆணையாளர், கற்கை நெறி விரிவுரையாளர், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், கற்கை நெறியை முடித்த மாணவர்கள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:
Post a Comment