அண்மைய செய்திகள்

recent
-

சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை கிடப்பில் போடப்பட்ட குருந்தூர்மலை வழக்கு.

 சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை கிடப்பில் போடப்பட்ட குருந்தூர்மலை வழக்கு.




சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். எஸ். தனஞ்சயன் தெரிவித்துள்ளார்


குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக தெரிவித்து தொடரப்பட்ட  வழக்கானது  இன்றையதினம் (11) முல்லைத்தீவு நீதிவான்  நீதிமன்றத்திலே மேலதிக பதில் நீதிவான் த.கெங்காதரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 


குறித்த வழங்கு விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே சட்டத்தரணி இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் 


குருந்தூர்மலை பிரதேசத்திலே நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றப்பட வேண்டும் என அமைதிவழியிலே போராட்டத்தை நடாத்திய அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய நபர்களுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட  B/688/2022  வழக்கானது இன்றையதினம்(11) நீதிமன்றத்திலே எடுத்து கொள்ளப்பட்டது.


குறித்த வழக்கின் போது முல்லைத்தீவு பொலிஸார் தாங்கள் இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் மேலதிக ஆலோசனை பெற வேண்டும் என விண்ணப்பம் செய்திருந்தனர். 


இன்றையதினம் சந்தேக நபர்கள் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் உட்பட ஐந்து நபர்களாக இணைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் சார்பிலே முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினை சார்ந்த அனைத்து சட்டத்தரணிகளும் ஆஜராகி நாங்கள் விண்ணப்பம் செய்திருந்தோம். 


குறித்த வழக்கானது பிழையாக தாக்கல் செய்யப்பட்ட அமைதி வழியிலே போராடிய அரசியல் வாதிகள் மற்றும் சமூக அக்கறையுள்ளவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கென மன்றிற்கு தெரிவித்திருந்தோம்.


மேலும் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரையில் இவ்வழக்கினை கிடப்பில் போடவேண்டும் எனவும் மேலதிகமாக இந்த வழக்கினை தொடர வேண்டும் என சந்தர்ப்பம் ஏற்பட்டால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு மீண்டும் இந்த வழக்கானது நீதிமன்றிலே கொண்ட செல்லப்பட முடியும் எனவும் விண்ணப்பம் செய்திருந்தோம். அதனை ஏற்றுக்கொண்ட நீதவான் அவர்கள் குறித்த வழக்கினை இன்றைய தினத்திலிருந்து கிடப்பில் போட்டுள்ளார். மீளவும் அறிவித்தல் கிடைத்தால் மாத்திரம் குறித்த சந்தேக நபர்கள் வழக்கிற்கு வருகை தர வேண்டும் என மேலும் தெரிவித்தார்.




சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை கிடப்பில் போடப்பட்ட குருந்தூர்மலை வழக்கு. Reviewed by வன்னி on January 11, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.