அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சாவற்கட்டு பகுதியில் தலைக்கவசத்திற்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது.

 மன்னார் சாவற்கட்டு பகுதியில் தலைக்கவசத்திற்குள்  சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது.




மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள்  தலைக்கவசத்திற்குள் மிகவும் சூட்சுமமான முறையில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு வந்த 31 வயது இளைஞன் நேற்று (9) வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.


மன்னார் பொலிஸ் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திர பாலவின்  பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹரத்தின் வழிகாட்டலின் கீழ் மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சில்வா தலைமையிலான குழுவினர் சாவற்கட்டு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.


 விடத்தல் தீவு பகுதியில் இருந்து R15 ரக மோட்டார் சைக்கிளில்  தலைகவசத்தின் உட்பகுதியில்  சூட்சுமமான முறையில் 20 கிராம் 850 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை மறைத்து வைத்து வைத்து வருகை தந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ள மன்னார் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் மற்றும் சான்று பொருட்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.







மன்னார் சாவற்கட்டு பகுதியில் தலைக்கவசத்திற்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து ஐஸ் போதைப்பொருள் கடத்திய இளைஞர் கைது. Reviewed by வன்னி on February 10, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.