அண்மைய செய்திகள்

recent
-

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு விஜயம்!

 வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு விஜயம்!




வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் இராணுவப் பாதுகாப்புடன் இன்று (11.02) விஜயம் செய்திருந்தனர்.


இதன்போது, ஆலயத்தின் நிர்வாகத்தினரும் அங்கு பிரசன்னமாகியிந்தனர். இராணுவ பாதுகாப்புடன் சென்ற பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் இது தங்களது இடம் எனத் தெரிவித்து அப் பகுதியை சுற்றி பார்வையிட்டதுடன், ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் மற்றும் விக்கிரகப் பகுதிகளிலும் பாதணிகளுடன் நடமாடியுள்ளனர்.  


குறித்த குழுவினரின் கருத்தை மறுத்த ஆலய நிர்வாகத்தினர் இது தமது மூதாதையர்களால் பூர்வீகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் என இதன்போது தெரிவித்திருந்தனர்.








வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு விஜயம்! Reviewed by வன்னி on February 11, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.