அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் ரூ. 4 கோடி பெறுமதியான சட்டவிரோத பொருட்கள் அழிப்பு

 வவுனியாவில் ரூ. 4 கோடி பெறுமதியான சட்டவிரோத பொருட்கள் அழிப்பு- பம்பைமடு பகுதியில் மேலதிக நீதவான் முன்னிலையில் அழிப்பு



சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 4 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்கள் வவுனியாவில் நீதிபதி முன்னிலையில் அழிக்கப்பட்டது.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படவிருந்த அரிசி, மஞ்சள், கொத்தமல்லி, நிலக்கடலை  உட்பட 7000 கிலோகிராம் உணவுப்பொருட்களும், சட்டவிரோத கிருமிநாசினிகளுமே இவ்வாறு அழிக்கப்பட்டன.

பயன்பாட்டுக்கு எடுக்க முடியாத குறித்த பொருட்கள் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு எல்லைப்பகுதியில் வைத்து சுகாதார பரிசோதகர்களால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவற்றை உடைமையில் வைத்திருந்த நபர்களுக்கு 1 1/2 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் நீதிமன்றால் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று (07) வவுனியா பம்பைமடுப்பகுதியில் வைத்து மேலதிக நீதவான் ஜெ.சுபாஜினி, சிங்கள பிரதேசசபை செயலாளர் விமலவேணி நிசங்க, சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் குறித்த பொருட்கள் அழிக்கப்பட்டன.











வவுனியாவில் ரூ. 4 கோடி பெறுமதியான சட்டவிரோத பொருட்கள் அழிப்பு Reviewed by வன்னி on February 08, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.