அண்மைய செய்திகள்

recent
-

மகளிர் தினத்தை முன்னிட்டு கொமர்ஷல் வங்கியின் முள்ளியவளை கிளையினால் நடாத்தப்பட்ட வினாடிவினா போட்டியில் வற்றாப்பளை மகாவித்தியாலய பாடசாலை மாணவிகள் முதலிடம்



 மகளிர் தினத்தை முன்னிட்டு கொமர்ஷல் வங்கியின் முள்ளியவளை கிளையினால் நடாத்தப்பட்ட  வினாடிவினா (quiz) போட்டியில் வற்றாப்பளை மகாவித்தியாலய பாடசாலை மாணவிகள் முதலிடம். 


மகளிர் தினத்தை முன்னிட்டு கொமர்ஷல் வங்கியின் முள்ளியவளை கிளையினர் முல்லைத்தீவு  கல்வி வலயத்துடன் இணைந்து முல்லைத்தீவு  கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்கிடையில் மகளிரை கௌரவப்படுத்தும் முகமாக வினாடிவினா (quiz) போட்டி ஒன்றை இன்று (06) முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் நடத்தியிருந்தனர். 


இதனடிப்படையில் இன்று (06.03.2024) மாலை 02.00 மணிக்கு முல்லைத்தீவு  மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட  21 பாடசாலைகளை சேர்ந்த பெண் பிள்ளைகளுக்கிடையில் குறித்த  வினாடிவினா போட்டி நடைபெற்றது. 


ஒவ்வொரு பாடசாலையில்  இருந்தும்  தலா மூன்று மாணவிகள் தெரிவு செய்யப்பட்டு குறித்த குழுக்களுக்கு இடையிலான போட்டியாக இந்த போட்டி இடம் பெற்றது. 


இன்று நடாத்தப்பட்ட குறித்த வினாடிவினா (quiz) போட்டியில் 


முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலய பாடசாலை மாணவிகள் குழு முதலாமிடத்தை பெற்றுக் கொண்ட அதேவேளை 


முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர்  பாடசாலை மாணவிகள் குழு இரண்டாம் இடத்தையும் 


முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலய பாடசாலை மாணவிகள் குழு மூன்றாம் இடத்தையும் 


முல்லைத்தீவு விசுவமடு மகாவித்தியாலய பாடசாலை மாணவிகள் குழு நான்காம் இடத்தையும் 


முல்லைத்தீவு இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய பாடசாலை மாணவிகள் குழு ஐந்தாம்  இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர் 


குறித்த போட்டியில் வெற்றி பெற்ற குழுக்களுக்கு  வருகின்ற 13.03.2024 அன்று முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையில் கொமர்ஷல் வங்கியின் முள்ளியவளை கிளையினர் நடாத்தவுள்ள  சர்வதேச மகளிர் தின நிகழ்வில் பண பரிசில்கள், வெற்றிக்கேடயங்கள், பதக்கங்கள் சான்றிதழ்கள் என்பன வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்



மகளிர் தினத்தை முன்னிட்டு கொமர்ஷல் வங்கியின் முள்ளியவளை கிளையினால் நடாத்தப்பட்ட வினாடிவினா போட்டியில் வற்றாப்பளை மகாவித்தியாலய பாடசாலை மாணவிகள் முதலிடம் Reviewed by Author on March 07, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.