அண்மைய செய்திகள்

recent
-

முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் ரி. ஐ. டி யால் கைது

 முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ.அரவிந்தன் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் நேற்று (26.03) கைது செய்யப்பட்டுள்ளார்.


வவுனியா, தோணிக்கல், ஆலடி வீதியில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதியான செ.அரவிந்தன் கடந்த வாரம் முகப்புத்தக பதிவு தொடர்பில் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர் செல்லாத நிலையில் நேற்றைய தினம் (26.03) மீண்டும் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு சென்ற சமயமே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கொழும்பு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் ரி. ஐ. டி யால் கைது Reviewed by Author on March 27, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.