குஞ்சிக்குள வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியை நிறுத்தி வைப்பது தொடர்பாக பரிசீலனை
இக்கிராமத்திலுள்ள சமூக அமைப்பிலுள்ள அங்கத்தவர்களின் விடாமுயற்சியும் பரிந்துரை காரணமாக இறுதியாக நடந்த கூட்டத்தில் தாங்கள் சமர்ப்பித்த கோரிக்கைக்கு அமைவாக இவ் வைத்தியசாலையிலுள்ள மருத்துவர் தங்கள் ஊரிலுள்ள மக்களின் நிலையை உணர்ந்து நோயாளர் காவு வண்டியை வைத்தியசாலையில் தரித்து நிற்பதற்கு பரிசீலிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான விடயமாக உள்ளதோடு இக்கிராமத்திலுள்ள பெரும் உதவியாக அமையும் ஏனென்றாள் இக்கிராமத்திலுள்ள மக்கள் காட்டு விலங்குகளான கரடி யானை என்பவற்றினால் தாக்கப்படும் போதும் மற்றும் இக்கிராமத்தில் அடிக்கடி நிகழுகின்ற பாம்புக்கடிக்கு ஆளாக்கப்படுகின்றவர்களையும் கர்பினி தாய்மார்களையும் உடனடியாக ஏனைய வைத்திய சாலைக்கு அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்வதற்கும் இது பேருதவியாக அமையும் தற்போது வரைக்கும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்ற போது அவசர இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் நோயாளர் காவு வண்டியானது மன்னார் வைத்தியசாலையில் இருந்தோ மதவாச்சி வைத்திய சாலையிலிருந்தே வருகின்றது. இது காலதாமதிப்புக்கு ஆளாக்கப்படுவது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட நபரின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் இதுசவாலாக உள்ளது
No comments:
Post a Comment