உயர்தர பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ள நானாட்டான் மன்/டிலாசால் கல்லூரி மாணவர்கள்
மன்/டிலாசால் கல்லூரி நானாட்டான் பாடசாலையின் க. பொ . த. உயர்தர பரீட்சை -2023 முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் இப்பாடசாலையின் வரலாற்றில் முதன் முறையாக செல்வி. வின்சன் ஜோரச் ஆன் யுஷானிக்கா என்பவர் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்ட நிலையில் 06 இடத்தையும் பெற்று இப்படசாலையின் வரலாற்றை புதிதாக மாற்றி எழுதியுள்ளார் .அதேபோன்று...
வர்த்தக பிரிவில் 3Aசித்தி பெற்று மாவட்ட நிலை 02 பெற்றுள்ளார் செல்வன். ஞானக்கோன் தனுஷன் மன்னார் கல்வி வலயத்தில் முதலாவதும், மன்னார் மாவட்டத்தின் 2ம் நிலையும் ஆகும் .
விநாயகமூர்த்தி அபிராமி 2A,B மாவட்ட நிலை 07 ( வர்த்தகப்பிரிவு).
ஜெகநாதன் அரியஜோய்னஸ் 2A,C பெற்று மாவட்ட நிலை10(வர்த்தகப்பிரிவு)
ஜேசுதாசன் ஆன் டிலானி குலாஸ் 3A மாவட்ட நிலை 04 (கலைபிரிவு )
கோபாலகிருஷ்ணன் அபிஷா 3A மாவட்ட நிலை 08 ( கலைப்பிரிவு)
இவ்வாறாக எமது கல்லூரிக்கு சிறந்த பெறுபேறுகளை பெற்றுத் தந்த மாணவர்களுக்கும் இன்னும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இருக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு
இவர்களது கல்வி செயற்பாடுகளுக்கு உதவி புரிந்த பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள், குடும்ப உறவுகள் அனைவருக்கும் எமது பழைய மாணவர்கள் சார்பான நன்றிகளை தெரிவித்து நிற்கின்றோம்.
நன்றி பாடசாலை நிர்வாகம்
Reviewed by Author
on
June 03, 2024
Rating:








No comments:
Post a Comment