அண்மைய செய்திகள்

recent
-

தேர்தல் ஆணைக்குழு பெயரில் போலி இணையத்தளம்: மூன்று நாட்களுக்குள் கூகுள் Domainஇல் இருந்து நீக்கம்

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தைப் போன்று போலியான (ஃபிஷிங்) இணையத்தளத்தை வெளியிட்டவர்களின் அடையாளத்தை கூகுள் நிறுவனம் வெளிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CCID) பிரதிப் பொலிஸ் பரிசோதகர் (DIG) ரோஹன பிரேமரத்ன தெரிவித்துள்ளார். இலங்கையின் தேசிய சின்னம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் பெயரைப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க வடிவமைக்கப்பட்ட அமெரிக்காவை தளமாகக் கொண்ட போலி இணையத்தளம் கடந்த ஒன்பதாம் திகதி கண்டறியப்பட்டது. எவ்வாறாயினும், கடந்த 12ஆம் திகதி அமெரிக்காவை தளமாகக் கொண்ட கூகுள் நிறுவனம், இலங்கையில் உள்ள கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவிற்கு (CERT) பதிலளித்தது, உள்ளடக்கத்தை அகற்றிவிட்டதை உறுதிப்படுத்தினர். இந்நிலையில், கூகுள் போன்ற நிறுவனங்கள் இணையதள உரிமையாளர்களின் விவரங்களை அரிதாகவே வெளியிடுவதாக CERT இன் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார். இங்கு முக்கியக் காரணி பொதுமக்களின் விழிப்புணர்வு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, உடனடியாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவிப்பை வெளியிட்டோம். இதுபோன்ற போலி இணையதளங்களை நீங்கள் கண்டால், தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம். இந்தச் சூழ்நிலைகளில் Domain முக்கியமானது, அது கண்டறியப்பட்டவுடன் Domainஐ அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்." “பல போலி இணையதளத்தை உருவாக்குபவர்கள் திருடப்பட்ட அடையாள அட்டை மற்றும் கடன் அட்டைத் தகவல்களை தகவல்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த போலி இணையத்தளங்கள், தேசிய சின்னங்களை தவறாகப் பயன்படுத்தும் கடிதங்கள் மற்றும் ஜனாதிபதி, தேசிய அலுவலகம் அல்லது இலங்கை காவல்துறை போன்ற உத்தியோகபூர்வ அமைப்புகளில் இருந்து வருவது போல் போலி ஆவணங்களை உருவாக்க முடியும். இவற்றில் தேர்தல் ஆணையத்தின் போலி இணையதளம் மிகவும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. போலி இணையதளம் குறித்து தேர்தல் ஆணையம் குற்றப் புலனாய்வு தினைக்களத்தை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து சிசிஐடி, CERT மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை இணைந்து மூன்று நாட்களுக்குள் கூகுள் Domainஇல் இருந்து தளத்தை அகற்றுவதற்கு திறம்பட செயல்பட்டதாக” தமுனுபொல தெரிவித்துள்ளா
தேர்தல் ஆணைக்குழு பெயரில் போலி இணையத்தளம்: மூன்று நாட்களுக்குள் கூகுள் Domainஇல் இருந்து நீக்கம் Reviewed by Author on August 26, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.