ஹயஸ் வாகனத்தை காதுகளால் கட்டி இழுத்து சாதனை: முதியவரின் கவனத்தை ஈர்த்த சாதனை
தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை 100 மீற்றர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.
இன்று காலை 9.00 மணியளவில் யாழ். கொடிகாமம், நட்சத்திர மஹால் முன்றலில் ஏ9 வீதியில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.
வாகனத்தை வெற்றிகரமாக காதுகளால் இழுத்து சாதனை புரிந்த செல்லையா திருச்செல்வம் இதன்போது கெளரவிக்கப்பட்டார்.
இதேவேளை, தமிழ்நாடு, கொழும்பு, யாழ்ப்பாணம் என முன்னர் பல தடைகள் செல்லையா திருச்செல்வம், தனது தாடியால் பல்வேறு வாகனங்களை இழுத்து சாதனைபுரிந்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
ஹயஸ் வாகனத்தை காதுகளால் கட்டி இழுத்து சாதனை: முதியவரின் கவனத்தை ஈர்த்த சாதனை
Reviewed by Author
on
August 26, 2024
Rating:

No comments:
Post a Comment