அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலையன வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அமோக வரவேற்பு

 மன்னார் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் புதன் (7)  நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட வைத்தியர்

அர்ஜுனாவிற்கு மன்னார் மாவட்ட மக்கள்  அமோக வரவேற்பை வழங்கினர்.


கடந்த வெள்ளிக்கிழமை(2) இரவு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்து மீறி  நுழைந்து கடமைக்கு  இடையூரை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் மன்னார் போலீஸ் நிலையத்தில் வைத்தியசாலை தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து வைத்தியர் அர்ச்சுனா மன்னா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட வைத்தியர் சனிக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது அவரை இன்றைய தினம் 7ஆம்க்ஷ திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.


இந்த நிலையில் இன்றைய தினம்(7) குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது வைத்தியர் அருச்சுனா மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டார்.


வைத்திய சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி அண்ரன் புனித நாயகம் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றில்  முன்னிலையாகி இருந்தனர்.


சார் நீங்களே மேற்கொண்ட மன்னார் நீதவான் நிபந்தனையின் அடிப்படையில் தலா 50,000 ரூபாய் பிணையில் செல்ல அனுமதித்தார்.


இந்த நிலையில் மன்றில் இருந்து வைத்தியர் வெளியேறிய போது மன்னார் மாவட்ட நீதிமன்றத்திற்கு முன் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி வரவேர்த்தனர்.


பின்னர் மன்னார் மாவட்ட மக்கள் வைத்தியரை மன்னார் பொது விளையாட்டு மைதான பகுதிக்கு அழைத்துச் சென்று மாலை அணிவித்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



மன்னார்  - தம்பனைக்குளம்  பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி   உயிரிழந்தார்.  


இந்த சம்பவமானது கடந்த 28 ஆம் திகதி    ஞாயிற்றுக்கிழமை    இடம் பெற்றுள்ளது.


மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த  மரியராஜ் சிந்துஜா வயது (27)  என தெரிய வந்துள்ளது.


குறித்த பெண்ணின் மரணத்தின் போது சம்பவ தினம் விடுதியில் இருந்தவர்களின் அசமந்த போக்கே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டது.


இந்த நிலையிலேயே வைத்தியர் அர்ச்சுனா மன்னார்  மாவட்ட வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அங்கு கடமைக்கு இடையூரைக்கு  ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

















மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலையன வைத்தியர் அர்ச்சுனாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி அமோக வரவேற்பு Reviewed by Author on August 07, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.