மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் 50 வது பிறந்த தினத்தையொட்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் 50 ஆவது பிறந்த தின விழா இன்று(14) மாவட்ட செயலக நலம்புரிச் சங்கத் தலைவர் செல்வகுமார் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
பொன் விழா நிகழ்வை முன்னிட்டு விவசாயிகளுக்கு காப்புறுதி சான்றிதழ் வழங்கி வைக்கப் பட்டதோடு ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் மாவட்ட செயலக வளாகத்தில் மோட்டார் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதோடு, மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக சிரேஷ்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள், பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் 50 வது பிறந்த தினத்தையொட்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு
Reviewed by Author
on
August 14, 2024
Rating:

No comments:
Post a Comment