அண்மைய செய்திகள்

recent
-

சிந்துஜாவின் மரணத்தின் எதிரொலி-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடல்-பல்வேறு தீர்மானங்கள் முன்னெடுப்பு

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்  நேற்று செவ்வாய்க்கிழமை(20) மாலை அவசர கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் , உதவி மாவட்ட செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , வைத்தியசாலை பணிப்பாளர், அருட்தந்தையர்கள், வைத்திய நிபுணர்கள் ,சிவில் சமூக பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


 இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் எதிர்கால நகர்வு தொடர்பாகவும்   மக்கள் அச்சமின்றி வைத்தியசாலைக்கு வரும் சூழலை ஏற்படுத்தி முன்னோக்கி நகர்வோம் என்னும் நோக்கு நிலையில் பல விடயங்கள் அறிவு பூர்வமாக  ஆராயப்பட்டன.


 இதன் போது சில விடயங்களுக்கு தீர்வு கோரி  ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவதாக  அரசாங்க அதிபர் கூறினார். 


மேலும்  இன்முகத்தோடு நோயாளரை  அணுகும் முறைமை  தொடர்பில் பயிற்சி  வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.  


சிந்துஜாவின் துன்பியல் சம்பவம் போன்று இனி நிகழக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.




சிந்துஜாவின் மரணத்தின் எதிரொலி-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விசேட கலந்துரையாடல்-பல்வேறு தீர்மானங்கள் முன்னெடுப்பு Reviewed by Author on August 21, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.