வவுனியா தோணிக்கள் நாகபூசனி அம்மன் தேவாலயத்தில் அசம்பாவிதம்
வவுனியா தோணிக்கள் நாகபூசனி அம்மன் தேவாலயத்தில் அசம்பாவிதம்
வவுனியா தோணிக்கள் பகுதியில் உள்ள நாக பூசனி அம்மன் ஆலயத்தினுள் விசமிகள் சிலரால் தீ மூட்டல்பட்ட சம்பவம் ஒன்று இன்று (15) இடம்பெற்றுள்ளது
ஆலயத்தின் தென்பகுதி வாயிலூடாக நுழைந்த மர்ம நபர் அல்லது மர்ம கும்பல் சிரட்டைகளை கொண்டு தீ மூட்டி உள்ளனர் அதனை தொடர்ந்து அம்மன் சிலையில் இருந்த வெள்ளித்தாலி (பொட்டுத்தாலி) இரண்டினை கொள்ளையடித்து சென்றுள்ளதாக ஆலயத்தின் பூசகரால் தெரிவிக்கப்படுகிறது
இன்று காலை ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு வந்த பெண்ணொருவர் ஆலயத்தினுள் பெருமளவு புகை மூட்டம் காணப்பட்டத்தால் அச்சத்தில் அயலவர்களை கூச்சலிட்டு அழைத்துள்ளார் அதனை தொடர்ந்து பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேற்கொண்டு விசாரனைகளை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Reviewed by Author
on
October 15, 2024
Rating:


No comments:
Post a Comment