மன்னார் மாவட்டத்தின் முன்னணிக் கணக்கீட்டு ஆசிரியர் திரு. எஸ். சபேசன் அவர்களால் கணக்கியல் பாடத்திற்க்கான நூல் வெளியீடு.
மன்னார் மாவட்டத்தின் முன்னணிக் கணக்கீட்டு ஆசிரியரும், தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் கணக்காய்வாளராக பணியாற்றும் திரு. எஸ். சபேசன் அவர்களால், 2024 ம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணக்கியல் படத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக 500 பகுதி I எதிர்பார்க்கை வினாக்களும் அவற்றுக்கான விடைகளையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட 2000 பிரதிகளை கொண்ட கணக்கியல் புத்தகமானது 10.10.2014 அன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன் அவர்களுக்கு முதற் பிரதி வழங்கப்பட்டு வெளியீடு செய்யப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளியிடப்படும் முதலாவது கணக்கீட்டு பாடத்திற்கான புத்தகமாக இது காணப்படுவதுடன், கல்வி அமைச்சின் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக புதிய விடயங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளதுடன் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டியாக அமையுமென கல்விப்புலம் சார்ந்தோர் கருதுகின்றனர். மேலும் இந்நூலினை மாணவர்களுக்காக தொகுத்து வழங்கிய கணக்கீட்டு ஆசிரியர் திரு. எஸ். சபேசன் அவர்களுக்கு எமது மன்னார் இணையத்தின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

No comments:
Post a Comment