அண்மைய செய்திகள்

recent
-

பயங்கரவாத தாக்குதல் திட்டம் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு!

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் தங்கும் பிரதேசத்தை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சீராக்கல் மனு ஒன்றை சமர்ப்பித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அந்த விசாரணைகளின் போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான ஏனைய நபர்கள் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிக்கொணரும் வகையில் சிறையில் உள்ள பல சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்கும் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும் அனுமதிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் தெரிவிக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.



பயங்கரவாத தாக்குதல் திட்டம் தொடர்பில் பொலிஸாரின் அறிவிப்பு! Reviewed by Author on October 28, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.