அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கா.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்-ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சென்ற மாணவர்கள்

 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சை இன்று (17) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


பரீட்சைத் திணைக்களத்தின் விபரங்களுக்கு அமைவாக , நாடு முழுவதும் 3,545 மையங்களில் மொத்தம் 451,463 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ள னர்.


இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் கா.பொ.த சாதாரண பரீட்சை இன்று திங்கட்கிழமை(17) ஆரம்பமாகிய நிலையில் மன்னார் மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள்   காலை ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.


-மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.


-இன்று (17) காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் நேரத்துடன் பரீட்சை வழி காட்டுதல்களுக்கு அமைவாக பரீட்சைக்கு தோற்றி உள்ளனர்.


மன்னார் மாவட்டத்தில் சுமார் 32 பரீட்சை மையங்களில் 3224 பரீட்சாத்திகள் க பொ த சாதாரண பரீட்சை இன்றைய தினம் எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது










மன்னாரில் கா.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பம்-ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சென்ற மாணவர்கள் Reviewed by Vijithan on February 17, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.