இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட பெண் வேட்பாளர் சட்டமானி அ.கலிஸ்ரா டலிமா தேர்தல் அலுவலகம் திறப்பு- பெண்களுக்கான உரிமைகள் உள்ளடங்களாக பல்வேறு விடயங்கள் குறித்து தனது தேர்தல் கொள்கை முன் வைப்பில் தெரிவிப்பு.
இலங்கை தமிழரசு கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி மன்னார் மாவட்ட வேட்பாளர் சட்டமானி அ.கலிஸ்ரா டலிமா தேர்தல் பிரச்சாரத்திற்கான காரியாலயத்தை நேற்று சனிக்கிழமை (2) மாலை 5 மணி அளவில் தனது சொந்த ஊரான தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இதில் மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சியின் செயலாளர் உட்பட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஊர் மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னர் மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் முதல் பெண் வேட்பாளராக இவர் முதன் முறையாக பாராளுமன்ற தேர்தலில் களம் இறக்க பட்டுள்ளார்.
சட்டமாணியான இவர் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின் ஊடாக பெண்களுக்கான உரிமைகள் மற்றும் தொழில் வாய்ப்பு மற்றும் எதிர்காலத்தில் பெண்களை முதன்மைப்படுத்தும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திகளையும் பாராளுமன்ற சட்டம் தொடர்பான நடவடிக்கையையும் உரிமைகளை சட்ட ரீதியாக முன்னிறுத்தி வென்றெடுக்கவும் இன்னும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடவும் தமது தேர்தல் கொள்கை முன் வைப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
Reviewed by Author
on
November 03, 2024
Rating:





No comments:
Post a Comment