அண்மைய செய்திகள்

recent
-

கனடாவில் நடந்த கொடூரம் புலம்பெயர் தமிழர் கொலை மகன் கைது

 கனடா ஸ்காபுரோவில் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவரின் மகனே இந்த கொடூர சம்பவத்தை செய்த நிலையில் . மகனைக் கனேடியப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



யாழ்ப்பாணத்தை சேர்ந்த 66 வயதுடைய நபரே குத்திக் கொலை செய்யப்பட்டவராவார். உயிரிழந்தவர் கடந்த 40 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வரும் நிலையில், அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.



அவரது மகன் காதல் முறிவு காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர் என சொல்லப்படுகின்றது. இந்நிலையில் நேற்று இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்துள்லதாக கூறப்படுகின்றது.


உடனடியாகக் கனடா பொலிஸார் அவரைக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் நிலையில் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   




கனடாவில் நடந்த கொடூரம் புலம்பெயர் தமிழர் கொலை மகன் கைது Reviewed by Author on November 22, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.