மன்னாரில் மனித உரிமைகள் தினத்தையொட்டி இளையோரின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் இடம் பெற்ற விழிப்புணர்வு ஊர்வலம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(10) காலை 11 மணியளவில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெசிடோ)ஏற்பாட்டில் இளையோர்களை ஒன்றிணைத்து விழிப்புணர்வு ஊர்வலம் இடம் பெற்றது.
மன்னார் பஜார் பகுதியில் இருந்து குறித்த ஊர்வலம் ஆரம்பமானது.
இளையோர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் குரல் கொடுக்கும் முகமாக குறித்த ஊர்வலம் இடம் பெற்றது.
மன்னார் பஜார் பகுதியில் மக்களை கவனயீர்க்கும் வகையில் மேற்கத்தேய இசை வாத்தியம் முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு கவனயீர்ப்பு ஊர்வலம் இடம் பெற்றது.
மன்னார் பஜார் பகுதியில் இருந்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக சென்று மீண்டும் மன்னார் பஸ் நிலையத்தை வந்தடைந்தது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,சிவில் சமூக பிரதிநிதிகள்,இளைஞர்,யுவதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
Reviewed by Author
on
December 10, 2024
Rating:





No comments:
Post a Comment