அண்மைய செய்திகள்

recent
-

மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் சிறப்பாக இடம் பெற்ற சூரிய மின்சக்தி திட்ட அங்குரார்பண நிகழ்வு

  மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கட்டமைப்பு ரீதியான அபிவிருத்தி யை அடிப்படையாக கொண்டு   குறித்த   பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் கிளை சங்கமான ஐக்கிய இராச்சியத்தின் பழைய மாணவர் சங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி செயற்திட்டம் இன்றைய தினம்(17)  வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் அருட்சகோதரர் S.சந்தியாகு  தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


 பாடசாலையின் மின் கட்டண செலவீனத்தை குறைக்கும் முகமாகவும் திறன் வகுப்பறைகளின் செயல்பாட்டை அதிகரிக்கும் முகமாகவும் குறித்த சூரிய மின் சக்தி படலம் 25 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 


 குறித்த நிகழ்வில் மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்க கிளையின் தலைவர் திரு. M.டேவிட் தயாபரன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் இணைந்து சூரிய மின்சக்தி படலத்துக்கான நினைவு கல்லை திறந்து வைத்ததுடன் சூரிய மின் சக்தி செயற்பாட்டையும் ஆரம்பித்து வைத்திருந்தனர். 


 அதே நேரம் நிகழ்வின் இறுதியில் கடந்த வருடம் வலய ரீதியாக இடம்பெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில் மாவட்ட ரீதியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் விருந்தினர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்ட மையும் குறிப்பிடத்தக்கது.











மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் சிறப்பாக இடம் பெற்ற சூரிய மின்சக்தி திட்ட அங்குரார்பண நிகழ்வு Reviewed by Author on January 17, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.