அண்மைய செய்திகள்

recent
-

பசி இல்லா தேசம் மன்னார் கிளை அங்குரார்பணம்

 மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக பல்வேறு சமூக பணிகளை செயற்படுத்தி வரும் பசியில்லா தேசம் அமைப்பின் மன்னார் மாவட்டத்துக்கான பிரதான கிளை பசி இல்லா தேசம் அமைப்பின் இணைப்பாளர் சதீஸ் தலைமையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது


 மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கணேகஸ்வரன் மன்னார் நகர் பிரதேச செயளாலர் ம.பிரதீப் உள்ளடங்களாக விருந்தினர்கள் இணைந்து பிரதான கிளையை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்


அதனை தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட 10 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக விருந்தினர்களால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது


குறித்த நிகழ்வில் அரச அதிபர்,பிரதேச செயலாலர்,அரச அதிகாரிகள்,மதத்தலைவர்கள்,மகளீர் அமைப்பின் பிரதி நிதிகள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்


பசியில்லா தேசம் அமைப்பானது மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக இரத்த தானமுகாம்கள்,நிவரண பொருட்கள்,வாழ்வாதார உதவிகளை வறிய குடும்பங்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது











பசி இல்லா தேசம் மன்னார் கிளை அங்குரார்பணம் Reviewed by Author on January 07, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.