பாட்டியின் மாத்திரையை உண்ட ஒன்டரைவயது குழந்தை உயிரிழப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை எடுத்து உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த பாட்டியின் மாத்திரையை யாரும் கவனிக்காத நிலையில் குழந்தையொன்று எடுத்து நேற்று மாலை விழுங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று இரவு திடீரென குழந்தைக்கு சுகவீனம் ஏற்பட்டதனை தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை (04) மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் ஆரோக்கிய அன்டனி சஞ்யித் எனும் ஒன்றரை வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் உடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments:
Post a Comment