கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட தேடுதல்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியா - காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு குழு, விமானம் ஊடாக வந்ததாக கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய இன்று (03) காலை 11.59 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்த UL 122 விமானம், முழுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், விமானத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரும் நாட்டிற்குள் வந்ததாக எந்த தகவலும் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட தேடுதல்
Reviewed by Vijithan
on
May 04, 2025
Rating:

No comments:
Post a Comment