கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைப்பு
கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.
தமிழின அழிப்பு நினைவகம் எனும் பெயரில் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த நினைவுத்தூபி உடைக்கப்பட்ட பின்னர், அதற்கு பதிலாக இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளது.
கனடா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கனடா பிரம்டனில் நினைவுத்தூபி திறக்கப்பட்டுள்ளமை எங்கள் கூட்டு வரலாற்றில் முக்கியமான ஒரு தருணமாகும் என கனடாவின் நீதியமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறந்து வைப்பு
Reviewed by Vijithan
on
May 12, 2025
Rating:
.jpg)
No comments:
Post a Comment