குழந்தையைக் காப்பாற்றிய தாய்க்கு நேர்ந்த பரிதாபம்
கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தின் போது, விபத்துக்குள்ளான பேருந்தின் கீழே பெண்ணொருவர் சிக்கியிருந்த நிலையில், தனது ஆறு மாத குழந்தையை இடுப்பின் கீழே பாதுகாத்து வைத்திருந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
இந்த ோ விபத்தில் தனது குழந்தை மற்றும் மனைவிக்கு அருகில் இருந்த தந்தை, ஏற்கனவே பேருந்தின் அடியில் நசுங்கி மரணித்திருந்தார்.
பல மணிநேரம் நீடித்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, தாயும் குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் இன்று (11) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
குறித்த குழந்தை தற்போது மேலதிக சிகிச்சைக்காக பேராதனையில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க விசேட சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
குழந்தையைக் காப்பாற்றிய தாய்க்கு நேர்ந்த பரிதாபம்
Reviewed by Vijithan
on
May 12, 2025
Rating:
Reviewed by Vijithan
on
May 12, 2025
Rating:


No comments:
Post a Comment